தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை டொரோன்டோ(Toronto) நகரத்தில் அமைப்பதற்கான தீர்மானம் டொரோன்டோ நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. Scarbor...
தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை டொரோன்டோ(Toronto) நகரத்தில் அமைப்பதற்கான தீர்மானம் டொரோன்டோ நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
Scarborough தென்மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் இந்தத் தீர்மானத்தை முன்வைத்துள்ளார்.
டொரோன்டோவில் தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை அமைப்பதற்கு தமிழ் சமூகத்துடன் இணைந்து Toronto நகரசபை பணியாற்ற இந்தத் தீர்மானம் கோரப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை நகரசபை உறுப்பினர் Josh Matlow வழிமொழிந்துள்ளார்.
தனது தீர்மானத்தை Toronto நகர சபை ஏகமனதாக நிறைவேற்றியதில் பெருமை கொள்கிறேன் என வாக்கெடுப்பின் முடிவில் பார்த்தி கந்தவேள் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தை ஏகமனதாக ஆதரித்த நகர முதல்வர் Olivia Chow உட்பட ஏனைய நகரசபை உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.