தமக்கு எதிராக சர்வதேச காவல்துறையினரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, நா...
தமக்கு எதிராக சர்வதேச காவல்துறையினரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ள போதைப் பொருள் வர்த்தகரான குடு சலிந்து என்ற சலிந்து மல்சித்தவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவரது சட்டத்தரணி ஊடாக அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லஃபார் தாஹீர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இதன்போது திகதியிட்டுள்ளது.