கம்பஹா, கடவத்தை மற்றும் கனேமுல்ல பகுதிகளில் துசித்த ஹல்லொலுவவின் ஜீப் வாகனத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தி, தனிப்பட்ட ஆவணங்களை திருடிய சம்ப...
கம்பஹா, கடவத்தை மற்றும் கனேமுல்ல பகுதிகளில் துசித்த ஹல்லொலுவவின் ஜீப் வாகனத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தி, தனிப்பட்ட ஆவணங்களை திருடிய சம்பவம் தொடர்பாக கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கமைய, இந்த குற்றச் செயலுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு நபர்கள் (வயது 27 மற்றும் 37) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து T-56 வகை துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 13 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மெகசின் ஒன்றும், சுமார் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள் நாளை (03) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.