யாழ்ப்பாணம் - சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் போதை மாத்திரைகளுடன் இன்று (27) சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்து...
யாழ்ப்பாணம் - சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் போதை மாத்திரைகளுடன் இன்று (27) சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 23 வயதுடைய குறித்த இளைஞர் 60 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.