நடப்பாண்டில் இதுவரை இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததற்காக மொத்தம் 181 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுட...
நடப்பாண்டில் இதுவரை இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததற்காக மொத்தம் 181 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 24 இந்திய மீன்பிடி படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று (13) இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்தபோது, கடற்படை ஒரு மீன்பிடிக் கப்பலைக் கைப்பற்றி, ஏழு இந்திய மீனவர்களைக் கைது செய்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட படகும் மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்.மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.


