வடக்கு கிழக்கை கட்டியொழுப்ப கனடா உதவும் - தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தூதுவர் உறுதி

வடக்கு கிழக்கை கட்டியொழுப்ப கனடா உதவும் - தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தூதுவர் உறுதி

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டு தூதுவர் தேசிய மக்க...

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டு தூதுவர் தேசிய மக்கள் சக்தியின் யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கான கனடா தூதுவருக்கும், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா மற்றும் க.இளங்குமரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இதன்போது யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைவரம், காணி பிரச்சினை, வடக்கை இலக்காகக் கொண்டு அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தியால் நிச்சயம் தீர்வுகள் முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், தமிழ் மக்களும் முழு அளவில் அரசாங்கம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அத்துடன், வடக்கு, கிழக்கை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு கனடாவும் உதவி நல்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கனடா தம்மால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்கும் என தூதுவர் பதிலளித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தை போல இல்லாமல் இந்த அரசாங்க ஆட்சியாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள், மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களே தற்போது இருக்கின்றார்கள் எனவும், தற்போதைய ஜனாதிபதியும் சர்வ அதிகாரம் கொண்டவராக இல்லாமல் மக்களின் தலைவனாக செயற்படுகின்றார் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முதலீடுகள் செய்வதற்கான சூழல் பற்றியும் பேசப்பட்டுள்ளது.

வடக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்கு வைத்து கனடாவால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் வெற்றியளிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள், தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

இலங்கைக்கான கனடா தூதுவர் தமது சேவைக்காலம் முடிவடைந்து இம்மாதத்துடன் தாயகம் திருப்பவுள்ளார். அவர் ஆற்றிய சேவைகளுக்கு தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,113,Astrology,30,cinema,268,doctor,13,Gallery,131,india,429,Jaffna,3842,lanka,9396,medical,7,Medicial,39,sports,404,swiss,15,technology,84,Trending,4610,Videos,10,World,664,Yarlexpress,4354,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வடக்கு கிழக்கை கட்டியொழுப்ப கனடா உதவும் - தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தூதுவர் உறுதி
வடக்கு கிழக்கை கட்டியொழுப்ப கனடா உதவும் - தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தூதுவர் உறுதி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKDRqsH5sPB7Tv64slQCnEXkapatWbWlqO3zadyNco_96BtoffH9UwylYXUwk3jEebKodu49KeibcFCGE70Hpw9WfrbYHYY92eCtMjpCYQG2QKCYl_sze12mUBqCC0hRZEgLaIAHQsEsysN34kqKei0z1VAPQEJC_5Vrzg7gtGnz-Bc8qw083MQ_RBQtXv/w640-h482/WhatsApp%20Image%202025-07-16%20at%2012.35.10_9dcd2b22.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKDRqsH5sPB7Tv64slQCnEXkapatWbWlqO3zadyNco_96BtoffH9UwylYXUwk3jEebKodu49KeibcFCGE70Hpw9WfrbYHYY92eCtMjpCYQG2QKCYl_sze12mUBqCC0hRZEgLaIAHQsEsysN34kqKei0z1VAPQEJC_5Vrzg7gtGnz-Bc8qw083MQ_RBQtXv/s72-w640-c-h482/WhatsApp%20Image%202025-07-16%20at%2012.35.10_9dcd2b22.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2025/07/blog-post_16.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2025/07/blog-post_16.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content