12 கிலோகிராம் 160 கிராம் குஷ் ரக போதைப்பொருளுடன், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (07) அத...
12 கிலோகிராம் 160 கிராம் குஷ் ரக போதைப்பொருளுடன், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்கள் 42,22,43 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.