அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனின் வீடு மற்றும் அலுவலகங்களில் எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க புலனாய...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனின் வீடு மற்றும் அலுவலகங்களில் எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் (22) சோதனையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்கள் மற்றும் எப்.பி.ஐ. பறிமுதல் செய்த ஆதாரங்களை ஜோன் போல்டன் சேமித்து வைத்திருந்ததாக கூறியே இச்சோதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தை உருவாக்க இந்தியாவுக்கு ட்ரம்ப், 50 சதவீத வரி விதித்தது, அமெரிக்காவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ட்ரம்பின் செயல்கள் நம் நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகின்றன' என்று ஜோன் போல்டன் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.