வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்...
வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர், நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்துள்ளார்.
மனுஷ நாணாயக்கார தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்துள்ளாரா என்பது தொடர்பிர் விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டாளர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.