முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதும், அவருக்கான பிணையை மறுக்கும் முடிவும் கேள்விக்குரியவை என இலங்கை தமிழரசுக் கட்சியின் ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதும், அவருக்கான பிணையை மறுக்கும் முடிவும் கேள்விக்குரியவை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாட்டுத் தலைவர்கள் பதவியில் இருந்தபோது செய்த குற்றங்களுக்காக சட்டநடவடிக்கை எடுக்க முடியும். யாவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை அவர் வலியுறுத்தினார்.
எனினும், நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றத்திற்கு வெள்ளிக்கிழமை ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு அவருக்கு பிணை மறுக்க வலியுறுத்துவது முற்றிலும் தவறானது எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.