யாழ் மாநகர சபை நடவடிக்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் சுவீகரன் நிஷாந்தன் பங்கேற்க ஒரு மாதம் தடை விதித்து யாழ் மாநகர முதல்வர் உ...
யாழ் மாநகர சபை நடவடிக்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் சுவீகரன் நிஷாந்தன் பங்கேற்க ஒரு மாதம் தடை விதித்து யாழ் மாநகர முதல்வர் உத்தரவிட்டார்.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் வசீகரனுக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் சு.நிஷாந்தனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது உறுப்பினர் நிஷாந்தன் தன் அருகில் வந்து தன்னை அச்சுறுத்தியதாகவும் இதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் வசீகரன் சபையில் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது உறுப்பினர் நிஷாந்தனுக்கு சபை நடவடிக்கையில் ஒரு மாதம் பங்கேற்க தடை விதிப்பது தொடர்பாக சபையின் யோசனையை கேட்டார்.
இரு தரப்பு விளக்கத்தையும் பார்த்து விட்டு நடவடிக்கை எடுக்குமாறும் ஒரு தலைப்பட்சமாக செயற்பட வேண்டாம் பல உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்த போதும் முதல்வர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
இதனையடுத்து ஏனைய உறுப்பினர்களுக்கு முன் எச்சரிக்கையாக உறுப்பினர் நிஷாந்தனுக்கு ஒரு மாதம் சபை நடவடிக்கையில் இருந்து பங்கேற்க தடைவிதிப்பதாக உத்தரவிட்டார்.





