யாழில் மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல்.. வைத்தியசாலையில் அனுமதி. யாழ் மாநகர சபை மின்சார சபை ஊழியர் ஒருவரை கடமை நேரத்தில் பொதுமகன் ஒருவர்...
யாழில் மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல்.. வைத்தியசாலையில் அனுமதி.
யாழ் மாநகர சபை மின்சார சபை ஊழியர் ஒருவரை கடமை நேரத்தில் பொதுமகன் ஒருவர் தாக்கியதில் யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவது இன்று திங்கட்கிழமை யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட 18 ஆம் வட்டாரம் கொழும்பு துறை வளம்புறம் வீதி மின் விளக்கு திருத்த வேலைகளில் குறித்த ஊழியர் ஈடுபட்டிருந்தார்.
இதன் போது அருகில் உள்ள வீட்டு நபர் ஒருவர் தனது மின்கம்பத்தில் உள்ள மின் விளக்கை முதலில் பழுது பார்க்குமாறு ஊழியருடன் முரண்பாட்டில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார்.
தாக்கியதில் காயம் அடைந்த குறித்த ஊழியர் யாழ் போதன வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடும் வழங்கப்பட்டுள்ளது