யாழ்ப்பாணத்தில் பத்தரை லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆறுகால்மடம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக ...
யாழ்ப்பாணத்தில் பத்தரை லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறுகால்மடம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்த நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பத்தரை லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாகவும் , குறித்த நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.


