சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் ...
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை சென்னை சூப்பர் கிங்;ஸ் அணிக்கு வழங்கியது.
இதற்கமைய போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.


