இஸ்ரேலின் போர் நிறுத்த மீறுதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடக்கு இஸ்ரேலின் மனாரா குடியிருப்புகள் மீது இன்று (09) அதிகாலை ஹிஸ்புல்லா அமை...
இஸ்ரேலின் போர் நிறுத்த மீறுதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடக்கு இஸ்ரேலின் மனாரா குடியிருப்புகள் மீது இன்று (09) அதிகாலை ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எமது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய - அமெரிக்க ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்படும் வரையில் இப் பதிலடி தாக்குதல்கள் தொடரும்” என அமைப்பின் டெலிகிராம் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று வான் பரப்பிலேயே அழிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



