களனிவெளி புகையிரத பாதையில் இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது என்று புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சம...
இப்பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு செயற்பாடுகள் காரணமாகவே இந்த புகையிரத பாதை மூடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இப்பாதை நேற்று இரவு 8.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 4.00 மணி வரையில் முழுமையாக மூடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.