நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம்? நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நவம்பரில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், இரகசியமா...
நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம்? |
நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்வொன்றில் நயன்தாரா பேசும்போது, “எனது வருங்கால கணவருக்கு நன்றி” என்று தெரிவித்தார். இதன்மூலம் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது.
கேரளாவில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க இரகசியமாக நிச்சயதார்த்தம் நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே இருவரும் அமெரிக்காவுக்கு சென்று திரும்பியுள்ளனர். அத்துடன் அமெரிக்காவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டனர். இப்படங்கள் குறித்த கேள்விக்கு, “நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன்” என்று விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.
நயன்தாராவுக்கு இப்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, தெலுங்கில் ‘சை நரசிம்ம ரெட்டி’ என்று கை நிறைய படங்கள். அஜித்குமாரின் விசுவாசம் படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார். அடுத்த சில மாதங்கள் சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருப்பார் என்றும், இந்த வருடம் இறுதியில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கும் என்றும் இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கும் முடிவில் நயன்தாரா உள்ளார்.