தனது விருப்பத்தின்படி மருத்துவர்கள் உதவியுடன் தனது உயிரை விட முடிவு செய்துள்ள அவுஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் குடால் தனது இறப்புக்கு முந்தைய ந...
தனது விருப்பத்தின்படி மருத்துவர்கள் உதவியுடன் தனது உயிரை விட முடிவு செய்துள்ள அவுஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் குடால் தனது இறப்புக்கு முந்தைய நாளை சந்தோஷமாக கொண்டாடியுள்ளார்.
சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு மருத்துவமனையில் தனது உயிரை விட முடிவு செய்துள்ள டேவிட் தனது இறப்புக்கு முந்தைய நாளை எந்த பயமும் கவலையுமின்றி சந்தோஷமாகக் கொண்டாடியதோடு பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் 'Ode To Joy' என்ற ஜேர்மானிய பாடலின் சில வரிகளை மகிழ்வுடன் பாடியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தனது உடல் நலம் குன்றி வருவதாகவும் கண் பார்வை குறைந்துகொண்டே வருவதாகவும் கூறியிருந்த டேவிட் இதற்கு மேல் வாழ விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
தனது மரணத்துக்கு முந்தைய நாளில் சிறிது நேரம் அவர் தனது பேரக்குழந்தைகளுடன் பேசல் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் செலவழித்தார்.
தான் விரும்பும் நேரத்தில் தனது உயிரை விடுவதற்கான உரிமை ஒருவருக்கு கொடுக்கப்பட வேண்டும் என அவர் கூறியிருந்ததும், அவுஸ்திரேலிய சட்டம் அதற்கு இடமளிக்காததால், சுவிட்சர்லாந்தில் மருத்துவர்கள் உதவியுடன் அவர் தனது உயிரை விட முடிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.