யாழில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளர் செல்வராசா இராசேந்திரம் (56) வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வ...
யாழில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளர் செல்வராசா இராசேந்திரம் (56) வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று (28) அதிகாலை 4 மணியளவில் கொழும்புத்துறை பகுதியில் இவர் இனந்தெரியாத நபர்களினால் வாள்வெட்டுக்கிலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நான்கு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிக்கட்டி வந்த வாள்வெட்டுக் கும்பல் ஊடகவியலாளர் மீது வாளால் வெட்டிவிட்டு தப்பித்துள்ளது வாள்வெட்டுக்கிலக்கானவர் கோப்பாய் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையாவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.