இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம் 7 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தனிநபர் ...
இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம் 7 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம் 7 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்து இருப்பதாக மத்திய புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2011-12ஆம் நிதியாண்டில் தனிநபர் சராசரி வருமானம் 63 ஆயிரத்து 462 ரூபாயாக இருந்தது.இது 2012-13ஆம் நிதியாண்டில் தனிநபர் சராசரி வருமானம் 70 ஆயிரத்து 83 ரூபாயாகவும், 2013-14ஆம் நிதியாண்டில் 79 ஆயிரத்து 118 ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. அடுத்து வந்த 2014-15, 2015-16, 2016-17 ஆம் நிதியாண்டுகளில் தனிநபர் சராசரி வருமானம் முறையே 86 ஆயிரத்து 647 ரூபாய், 94 ஆயிரத்து 731 ரூபாய் மற்றும் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 870 ரூபாயாக அதிகரித்திருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் தனிநபர் சராசரி வருமானம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 835 ரூபாயாகவும், 2018-19ஆம் நிதியாண்டில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 397 ரூபாயாகவும் தனிநபர் சராசரி வருமானம் உயர்ந்திருப்பதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற பிறகான 4 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் 45 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.