ஜாதிக கெல உறுமயவின் தலைவரும் மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஐயமொன்றை ம...
ஜாதிக கெல உறுமயவின் தலைவரும் மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட்டதுடன் புதிய அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இதற்காக இன்று யாழ்ப்பாணதிற்கு விஐயம் மேற்கொண்ட அமைச்சர் யாழ் புகையிரதம் நிலையம் முன்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிலையான திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து யாழ் நீதி மன்ற தொகுதிக்கு முன்பாக யாழ்ப்பாண நிர்வாக தொகுதிக்கான அடிக்ல்லை நாட்டி வைத்தார். இதன் பின்னர் தூர சேவை பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.