மிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினா்கள் மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினா்கள் அடங்கிய கு...
மிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினா்கள் மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினா்கள் அடங்கிய குழு இன்று காலை வவுனியா வடக்கு ஒலுமடு- வெடுக்குநாறி மலைக்கு சென்றுள்ளனா்.
வெடுக்குநாறி மலையை சூழ சிங்கள குடியேற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், வெடுக்குநாறி மலையையும் அங்குள்ள ஆதி சிவன் ஆலயத்தினையும் தொல்லியல் தி ணைக்களத்தின் ஊடாக அபகாித்து, பௌத்த ஆலயம் நிறுவ முயற்சிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே வெடுக்குநாறி மலைக்கு இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினா் கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினா்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினா்கள் கு ழு பயணமாகியிருக்கின்றது. இந்த குழுவில்,
நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான ஜ,ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் இ,தணிகாசலம் மற்றும் பிரதேசசபை
உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினர் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாரி மலைக்கு இன்று பயணித்தனர். வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வ ரர் ஆலயத்திற்கு சென்ற குழுவினர் ஆலயத்தின் பூசகர்
மற்றும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினர். அதன் பின்னர் புதிதாக மக்கள் மீள்குடியேறிய பகுதியான காஞ்சூர மோட்டைக்குச் சென்றதுடன், அங்குள்ள மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டனர்.












