சண்டிலிப்பாயில் மக்கள் சந்திப்பும், சமகால அரசியல் கலந்துரையாடலும் - யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டார் ...
சண்டிலிப்பாயில் மக்கள் சந்திப்பும், சமகால அரசியல் கலந்துரையாடலும் - யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டார்
மானிப்பாய்த்தொகுதிக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு மாகியப்பிட்டி பகுதியில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மானிப்பாய்த்தொகுதிக்குப்பொறுப் பான நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடையிலான சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. பிரதேச மக்களின் வேண்டுகோளையடுத்து குறித்த பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பிரதேசத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன் மற்றும், அரசியல் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
இன்று 01.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில் சண்டிலிப்பாய் வடக்கு கொம்பனிப்புலம் ஸ்ரீ அம்பாள் சனசமூக நிலையத்திலும், மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் வடக்கு, உலக்காவளை ஸ்ரீ ஞானவைரவர் சனசமூக நிலைய மண்டபத்திலும் மேற்படி சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி வட்டாரத்தின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வலி.தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபை உறுப்பினர் சி.அனுசன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் சமகால அரசியல் கலந்துரையாடல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் என்பன இடம்பெற்றுள்ளன.