“இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்த அரசை நாம் கவிழ்த்தே தீருவோம்.” – இவ...
“இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்த அரசை நாம் கவிழ்த்தே தீருவோம்.”
– இவ்வாறு தெரிவித்தார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன.
அவர் மேலும் கூறுகையில்,
“ஐக்கிய தேசிய முன்னணி அரசு மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையில்லை. உயிர்த்த ஞாயிறன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலின் பின்னர் இந்த அரசை நாட்டு மக்கள் முற்றாக வெறுத்துவிட்டார்கள்.

தாக்குதல்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை கிடைத்தும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் அசமந்தப்போக்கில் இருந்த இந்த அரசை எப்படி நம்புவது?
எனவே, இந்த அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கையில் நாம் இறங்கியுள்ளோம். எந்த வேளையிலும் இந்த அரசு கவிழும்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத இந்த அரசால் ஆட்சியைத் திறம்பட நடத்த முடியாது.
முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரையும் பதவி துறக்கச் செய்துவிட்டு இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்த அரசை வீட்டுக்கே அனுப்புவதே எமது நோக்கமாகும்” – என்றார்.