தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நி...
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 168 பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவடச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(6) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வெள்ள பாதீப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
மன்னார் நகரில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 168 அங்கத்தவர்களும்,மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 49 அங்கத்தவர்களும்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 176 குடும்பங்களைச் சேர்ந்த 570 அங்கத்தவர்களும், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 102 அங்கத்தவர்களும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 206 குடும்பங்களைச் சேர்ந்த 854 அங்கத்தவர்களும் வெள்ளப்பாதிப்புகளுக்கு உள்ளாகி உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளின் வசித்து வருகின்றனர்.
தற்போது வரை 4 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார் நகரத்தில் பெரிய கரிசல் பகுதியில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 168 அங்கத்தவர்கள் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எமிழ் நகர் கிராமத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 22 அங்கத்தவர்கள் இடம் பெயர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். புதுக்கமம் பகுதியில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 101 அங்கத்தவர்கள் இடம் பெயர்ந்த நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 அங்கத்தவர்கள் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் இருந்து இடம் பெயர்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 12 அங்கத்தவர்கள் இடம் பெயர்ந்த நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இது வரை 83 குடும்பங்களைச் சேர்ந்த 314 அங்கத்தவர்கள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் வசித்து வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள 12 கமநல சேவைகள் நிலையங்களில் உள்ள சகல சகல குளங்களும் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் வெள்ள பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளது. இது வரை 5653 ஏக்கர் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளது. மேலதிக விபரம் ஒரு வாரங்களில் சமர்ப்பிக்க முடியும்.
நீர் மட்டத்தின் அளவை பொறுத்தவரை கட்டுக்கரை குளம் 6 இஞ்சி வான் பாய்கின்றது. அகத்தி முறிப்பு குளம் இன்னும் ஒரு அடி உயர்ந்தவுடன் வான் பாயும் நிலை ஏற்படும்.
வியானிக்குளத்தின் நீர் மட்டம் 9 அடி 9 அங்குலத்தில் உள்ளது. தேக்கத்தில் தற்போது 11.3 அடி மட்டத்தில் நீர் உள்ளது. 13 அடியை அடையும் போது வான் பாய ஆரம்பிக்கும். களங்களின் வான் பாய்வதினால் மக்கள் கடினமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அயல் மாவட்டமான அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து நாச்சியார் தீவு என்கின்ற குளத்தின் 7 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நீர் வந்து கொண்டிருக்கின்றது. மேலும் நுவர, மார்க்கந்துவ ஆகிய குளங்களில் இருந்தும் வான் பாய்ந்து கொண்டு இருக்கின்றது. இவற்றினால் எமது மாவட்டத்தை பொறுத்த வரையில் மல்வத்து ஓயா(அருவி ஆறு) பகுதியை அண்டிய மக்கள் பாதிப்படையலாம்.
மடுக்கரை, வாழ்க்கைப்பெற்றான் கண்டல், இராசமடு போன்ற கிராமங்களும் அதனுடன் அண்டிய பகுதிகளும் பாதிப்பிற்கு உள்ளாகளாம். இதனால் இடம் பெயர்வுகளும் ஏற்படும்.
அவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க தயாரான நிலையில் உள்ளோம். 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த பிரதேசச் செயலாளர்களுக்கு கட்டளையை பிறப்பித்துள்ளேன்.
உடனடியாக களத்திலே கிராம சேவையாளர்களையும், அனார்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களையும் வைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களுக்கு உரிய பணிப்புரைகளை விடுத்துள்ளோம். மேலும் வெள்ளம் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக புலவு பயிர்ச் செய்கை அமைந்துள்ளது.
புலவு பயிர்ச் செய்கையை தவிர்த்துக் கொள்ளுமாறு பல கலந்துரையாடல்களில் தெரிவித்திருந்தேன். ஆனால் தற்போது புலவுக்குள் நெற்பயிர்ச் செய்கை செய்ததன் காரணத்தினால் பெருந் தொகையான ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை அழிவடைந்துள்ளது.
நீர் நிற்கின்ற நிலைகள் எல்லாம் நெல் வயல்களாக மாறியுள்ளது. அதனால் எல்லா இடங்களிலும் நீர் பரவி உள்ளது. வாய்க்கால்களை மக்கள் மூடுகின்றமையினால் வெள்ளம் தேங்குவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
மன்னார் நகரத்தை அண்மித்த பகுதியான வங்காலையில் உள்ள இரத்தினபுரி, தோமஸ்புரி போன்ற பகுதிகளிலும் வாய்க்கால்களில் நீர் ஓடாது தேங்கி நிற்பதினாலும் அங்கு இக்கட்டான நிலை ஏற்படும். சூரியக்கட்டைக்காட்டு குளத்தின் வான் பாய்வதினாலும் வஞ்சியன் குளம் போன்ற கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. அப்படி ஏற்படும் போது மக்கள் அங்கிருந்து இடம்பெயரும் நிலை ஏற்படும். இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அனார்த்த பிரிவு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
தற்போது மன்னார் மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே டெங்கு நோய் தடுப்பு தொடர்பாக தொடர்ச்சியாக எனது தலைமையில் கூட்டம் இடம் பெற்று வருகின்றது. முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமையும் குறித்த கூட்டம் இடம் பெற்றது. மன்னார் நகர் மற்றும் வங்காலை பகுதியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. சுற்றாடலையும் வீடுகளையும் சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டோம். வைத்தியர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலகர்கள், பொலிஸாரின் உதவியுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். டெங்கு நுளம்பின் தாக்கம் முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டவில்லை.
பராமரிப்பற்ற நிலையில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்கள், கட்டிடங்கள் உடைக்கப்பட்டுள்ளதோடு, துப்பரவு பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னாரில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரிக்கக்கூடிய நிலையில் உள்ள தனியார் கற்கை நிலையங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதோடு, அவ்வாறு டெங்கு நுளம்பின் தாக்கம் காணப்படும் தனியார் கற்கை நிலையங்களை தடை செய்யவும் பிரதேசச் செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கி உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.