கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் 2020 நிகழ்வின் ஞாபகார்த்தமாக இந்த ஆண்டின் தமிழ் மரபுத் திங்கள் நினைவு முத்திரை வெளியிடப்ப...
கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் 2020 நிகழ்வின் ஞாபகார்த்தமாக இந்த ஆண்டின் தமிழ் மரபுத் திங்கள் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இம் முத்திரை வடிவமைப்பு தமிழரின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் மேலோங்கி தெரிகின்றது என்று எல்லோராலும் பேசப்படும் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. மொழிகளுக் கெல்லாம் தாய் நமது தாய்மொழி ''தமிழ்'' எனும் கர்வத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.
நமது மருத்துவமும் விஞ்ஞானமும் கட்டிடக்கலையும் இன்றைக்கு உலகமே வியந்து பார்க்கின்ற ஒன்று "முன் தோன்றிய மூத்த குடிகள்" என்று சொல்லுமளவு நமது வரலாறு பழமையானது ஆயினும் அந்த அளவு அத்தகைய பெருமைக்குச் சொந்தக்காரர்களாகிய நாங்கள் அச் சிறப்புப்புக்களை புலம்பெயர் தேசங்களில் ஆவணப் படுத்தியிருக்கின்றோம் என்றால் அது எண்ணிக்கையில் மிகக் குறைவே இவ்வாறு உறுதியாக நமது இருப்பை நிறுவாது போனோமானால் எதிர்காலத்தில் தமிழரின் தொன்மை,வரலாறு, அடையாளம் என்பன அற்றுப் போய்விடக் கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை கருத்தில் கொண்டே இத் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் தமிழர் தொன்மையை பெருமையை,ஏனைய மொழி பேசுகின்ற மக்களுக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சொல்வதற்கும் எமது வளங்களை, கலைகளை எல்லாம் பறைசாற்றும் வகையில் முத்திரை வெளியிடப்பட்டது.
இம்முத்திரையில் தமிழர் தொடர்பிலான முக்கிய அம்சங்கள் குறியீடுகளாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றது வேரினை பிரிந்து வந்த தமிழினம் இன்று தேசங்கள் தோறும் கிளைபரப்பி இருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று கனடிய மண்ணில் பேரம் பேசும் சக்திகளாய் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது பெரும் பெருமை. அத்துடன் நாம் யார் என்பதை காண்பிக்க ஒரு குலச் சின்னம் போலவே நமது வாழ்வையும் வீழ்வையும் நன்கு அறிந்து நம்மோடு பயணப் பட்டிருக்கும் நமது குல விருட்சம் கற்பகத் தருவாம் பனையின் படம் முத்திரையில் இடம் பெற்றிருக்கின்றது.
அத்துடன் அப்பனையின் வேரிலே விழுதுகள் தம் வேர்களை முளைத்து கொள்ளுவது போல முடியுடைய மூவேந்தர்களாய் கொடி பரப்பி நிலைத்து நின்ற நம் மூதாதையர் சேர சோழ பாண்டியரின் சின்னங்கள் வரையப்பட்டுள்ளது.முதலாம் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு 12ம் நூற்ற்றாண்டில் 16 கோபுரங்களுடன் (கோபுரம் நுழைவாயில்), அதனை அண்டியுள்ள 7 தூண்கள் (பிராகாரத்தில்), 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் (அரங்குகள்) மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் (கோவில் குளங்கள்)கொண்டு 12ம் நூற்றாண்டில் இல் கட்டப்பட்ட மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் கோயில் தமிழர் கட்டிட கலையின் பொக்கிசமும் இம்முத்திரையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.காலப்போக்கில் தமிழரின் எத்தனையோ தற்காப்புக் கலைகள் காணாமல் போயிருந்தாலும் இன்றைக்கும் உலக அளவில் உயிர்ப்புடன் இருக்கிறது சிலம்பாட்டம். அகம் புறம் என பகுத்து வாழ்ந்த ஆதித்தமிழரின் வீரக்கலையான சிலம்பம் இடம் பெற்றிருக்கின்றது.
அத்துடன் நமது நிலம் வளம் வாழ்வில் இதில் எல்லாவற்றிலும் இணைந்திருக்கும் கலை என அனைத்து அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தம் வாழ்வில் தவிர்க்க முடியாததாக இருக்கும் யாழ் இசைக் கருவி தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கின்றது. ஆதி தமிழர் வாசித்த யாழ் இசைக் கருவி தவறாது இம் முத்திரையில் இடம் பிடித்திருக்கின்றது.
நமது மொழியின் இனத்தின் பெருமையை செழுமையை நினைவுகூற வருடம் தோறும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் வெறுமனே அந்தந்த நாட்களோடு முடிந்து விடக்கூடாது. இனிவரும் வரலாறு பேசும் அளவு அவற்றை உறுதியான சான்றாதாரங்களையும் ஆவணப்படுத்தி விட வேண்டும் எனும் நோக்கிலேயே இம் முத்திரையை கனடா தபால் தினைகளத்தின் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றது இவ் நினைவு முத்திரையை சிறந்த முறையில் வடிவமைத்த இளம் மாணவி சியானி சரவணமுத்து அவர்களுக்கும் அவறோடு இணைந்து உதவிய அணைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் நன்றி.