சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பரப்பிற்குள் நுழைந்து மீண்டும் நாடு திரும்பிக்கொண்டிருக்கும் இந்நாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக நாளைய தினம் விசேட கடற்படை கப்பலொன்று பயணிக்கவுள்ளதாக மீன்வள மற்றும் நீர்வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது
சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பரப்பிற்குள் நுழைந்து மீண்டும் நாடு திரும்பிக்கொண்டிருக்கும் இந்நாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக நாளைய தினம் விசேட கடற்படை கப்பலொன்று பயணிக்கவுள்ளதாக மீன்வள மற்றும் நீர்வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த படகுகளில் உள்ள மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடல் நிலைமை நன்றாக இருக்குமாயின் சில நாட்களிலேயே அவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்துவர எதிர்பார்ப்பதாகவும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தோடு, குறித்த கப்பல்களுக்கு தேவைக்கு மேலதிக எரிபொருட்களை குடாவெல்ல துறைமுகத்தில் இருந்து படகொன்றின் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களில் இருந்து பயணித்த மீன்பிடிக் கப்பல்களில் சுமார் 180 மீனவர்கள் வரை பயணித்துள்ளதாக மீன்வளத்துறை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.