தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது . 2020 பொதுத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது .
2020 பொதுத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை வெளிப்படுத்தும் தேர்தல் விஞ்ஞாபனமானது இன்று (ஜூலை 18) வெளியிடப்படும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனதிராசா அறிவித்துள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனமானது இன்று காலை 11 மணிக்கு யாழ்ப்பாணத்தின் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி தலைமையகத்தில் வெளியிடப்படும்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் மாவை சேனதிராசா குறிப்பிட்டுள்ளார்.