இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த எண்ணெய் கப்பலின் தீ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை இதனை அறிவ...
இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த எண்ணெய் கப்பலின் தீ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல்படை இதனை அறிவித்துள்ளது.
மசகு எண்ணெய் ஏற்றியபடி இந்தியாவிற்கு சென்ற பனாமா நாட்டை சேர்ந்த எம்டி நியூ டயமண்ட் கப்பல் நேற்று முன்தினம் தீப்பற்றி எரிய ஆரம்பித்திருந்தது. இதில் ஒரு கப்பல் பணியாளர் கொல்லப்பட்ட நிலையில், 22 பேர் மீட்கப்பட்டனர். ஒருவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீயை கட்டுப்படுத்த இலங்கை, இந்திய கடற்படைகள், இலங்கை விமானப்படை மற்றும் பிற அமைப்புக்கள் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்றிரவு பெரும் தீ கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
இந்த கப்பலில் 2,70,000 மெற்றிக்தொன் எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.