இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்றைய தினம் இலங்கையில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...
இன்றைய தினம் இலங்கையில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 55 பேருக்கும் மற்றும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 259 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,105 ஆக அதிகரித்துள்ளது.