வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் மரநடுகை வேலைத்திட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. வேலணை பிரதேச செயலர் சோதிந...
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் மரநடுகை வேலைத்திட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
வேலணை பிரதேச செயலர் சோதிநாதன் தலைமையில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வில் விவசாய பாட இணைப்பாளர் குற்றாலம் இளங்குமரன் அவர்களின் வழிகாட்டலில் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் உருவாக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட மலைவேம்பு மரங்கள் அல்லைப்பிட்டி வீதியோரங்களில் நாட்டப்பட்டது.
கிராம அலுவலர் குலசிங்கம் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட சவுக்கு மரங்கள் தீவக கடற்கரை ஓரங்களிலும் நாட்டிவைக்கப்பட்டது.