பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்களின் புகைப்படமொன்று வெளியாகிய சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்களின் புகைப்படமொன்று வெளியாகிய சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஊடக செயலாளராக கடமையாற்றிய தனுஸ்க ராமநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது முகநூலில் கருத்து வெளியிட்டிருக்கும் அவர், இன்று முற்பகல் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் சிலர் மேசையில் உணவருந்துவதற்கு அமர்திருக்கும்போது, அவர்களுக்கு அருகே பௌத்த பிக்கு ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் போல புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ருவன்செலிசாய விகாரைக்கு நேற்றுமுன்தினம் சென்று அங்கு பிக்கு ஒருவருககு தாமே குடைபிடிப்பதுபோன்ற புகைப்படமும், மேற்குறிப்பிட்ட புகைப்படமும் சமூக ஊடகங்களில் ஏட்டிக்குப் போட்டியாக வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையிலேயே தனுஸ்க ராமநாயக்க விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், தனக்கும் இந்தப் புகைப்படத்திற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.