யாழ் கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலை ஒரு லட்சம் வேலைவாய்ப்புச் செயலணிக்கு ஒப்பந்த அடிப்படையில் கைமாறுகிறது. வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு...
யாழ் கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலை ஒரு லட்சம் வேலைவாய்ப்புச் செயலணிக்கு ஒப்பந்த அடிப்படையில் கைமாறுகிறது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு உட்பட்ட குறித்த பாடசாலை பாரம்பரியமான ஓர் சைவப் பாடசாலையாக திகழ்ந்த நிலையில் மாணவர் அனுமதி குறைவடைந்து நிலையில் வடக்கு கல்வி அமைச்சினால் அண்மையில் மூடப்பட்டது.
இந்நிலையில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பு செயலணியின் தேவைக்காக குறித்த பாடசாலை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
குறித்தசெயலணி யாருடைய மேற்பார்வையில் இயங்குகிறது என சந்தேகங்களை நிலையில் குறித்த பாடசாலை செயலனியின் தேவைக்காக வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே குறித்த பாடசாலை ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான செயலனிக்கு வழங்கப்படுவதன் மூலம் வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் குறைந்த பாடசாலைகளை மூடி செயலியின் தேவைக்காக கையகப்படுத்தும் செயற்பாடுகள் தொடருமோ என்ற சந்தேகம் எழுகின்றது.