தற்போதைய சூழ்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படாது என்று சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார...
தற்போதைய சூழ்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படாது என்று சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
(28) ஊடகங்களிடம் பேசிய அமைச்சர்,
சுகாதார அறிவுறுத்தல்களின் விமான நிலைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை விசேட திட்டத்தின் ஊடாக தனிமைப்படுத்தும் முறை அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விமான நிலையம் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை என்றாலும், பயணிகளுக்கு திறக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.