மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனம் ஒன்றை பொலிஸார் கைப்பற்ற முயற்சித்தபோது பொலிஸாருடன் பொதுமக்கள் சிலர் தீவிரமாக முரண்பட்...
மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனம் ஒன்றை பொலிஸார் கைப்பற்ற முயற்சித்தபோது பொலிஸாருடன் பொதுமக்கள் சிலர் தீவிரமாக முரண்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்.தென்மராட்சி மந்துவில் மேற்கு பகுதியில் நேற்று மாலையில் இடம்பெற்றது. இதன்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து டிப்பர் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸாரால் கொண்டுசெல்லப்பட்ட டிப்பர் வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படாமல் மீசாலை புத்தூர் சந்தியிலுள்ள காணி ஒன்றினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.