ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா பயணிக்கவுள்ளார். ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் ...
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி இந்த அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மாநாடு செப்டெம்பர் 21 முதல் 23ஆம் திகதி வரை நிவ் யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதியுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்கள் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.