மதுபானசாலைகள் திறக்கப்பட அனுமதி வழங்கப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மதுபானசாலைகளுக்கு முன்பாக நீண்ட ...
மதுபானசாலைகள் திறக்கப்பட அனுமதி வழங்கப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மதுபானசாலைகளுக்கு முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் நின்றுக் கொண்டிருப்பதை காண முடிகின்றது.
மலையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள மதுபானசாலைகளுக்கு முன்பாக மது பிரியர்கள் நீண்ட வரிகளில் நின்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே, மதுபானசாலைகளுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை காண முடிகின்றது.