சுண்ணாகம் மின்சாபையில் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் சுண்ணாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன....
சுண்ணாகம் மின்சாபையில் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் சுண்ணாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
மின்சாரசபையில் கடந்த வாரம் இரவு வேளை உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 1 மில்லியன் பெறுமதியான வயர்களை திருடிச்சென்றனர்.இது தொடர்பில் சுண்ணாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவு பொலிஸாரிற்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பிரதான சந்தேகநபர்கள் உட்பட 5பேர் பொலிஸாiரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 23, 31, 27, 42, 30 வயதுடையவர்கள் எனவும் அராலி, சுண்ணாகம், மானிப்பாய், கொகக்குவில் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 45 றோல் வயர்கள் இரண்டு வட்டா வாகனங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. அதன் பெறுமதி 1 மில்லியனிற்கும் மேல் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைது நடவடிக்கை சுண்ணாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி எதிரிசிங்க மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் இடம்பெற்றது.