மு/துணுக்காய் கல்விளாங்குளம் மகாவித்தியாலயம் புனரமைப்பு.!பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்.தீவகம்,சரவணையை சேர்ந்த திரு விசுவாசம...
மு/துணுக்காய் கல்விளாங்குளம் மகாவித்தியாலயம் புனரமைப்பு.!பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்.தீவகம்,சரவணையை சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் அறக்கடளையினரால் குறித்த பாடசாலை புனரமைக்கப்பட்டு வர்ணம் பூசி,சுவரோவியங்களும் வரைந்து,மாணவர்களுக்கு மதிய போசனமும் வழங்கி கையளிக்கப்பட்ட நிகழ்வானது இன்று பாடசாலையின் அதிபர்
R.நிக்ஸன் தலைமையில் நடைபெற்றது.அத்துடன் அறக்கட்டளையினரால் பெயர்ப் பலகையும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில் அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான கல்விப்பிரிவு பொறுப்பாளர் K.சசிதரன்,தலைவர் தனேந்திரன்,செயலாளர் ந.விந்தன்கனகரட்ணம்,ஆலோசகர்,இ.மயில்வாகனம்,பொருளாளர்,எஸ்.கீர்த்தனா,உப தலைவர் Dr சி.செளந்தரராஜன்,உப செயலாளர் Dr இ.சற்குருநாதன்,இணைப்பாளர் T.யோசேப்,நிர்வாக சபை உறுப்பினர் S.கார்த்திகா மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.