சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4,000 இலங்கை தாதியர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த...
சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4,000 இலங்கை தாதியர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.
இங்குள்ள அடிப்படை செயற்பாடுகள் குறித்து ஆராய சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் 10 அதிகாரிகள் இலங்கை வந்துள்ளதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.