யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அமைச்சு ஒன்றின் செயல...
யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அமைச்சு ஒன்றின் செயலாளராக இடமாற்றம் பெற்று கொழும்பு செல்லவுள்ள நிலையில் யாழ். மாவட்ட அரச அதிபராக தற்போதைய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார்.
இதேநேரம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்து.
இதேநேரம் இது தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது இதுவரை இடமாற்ற ஏற்பாடுகள் தொடர்பில் உத்தரவுகள் ஏதும் கரம் கிட்டவில்லை என்றார்.