இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை 5 நாட்களுக்கு தளர்த்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை 5 நாட்களுக்கு தளர்த்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சரின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று அழைக்கப்பட்டது.
டயனா கமகே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கும் பின்னர் 28ஆம் திகதியிலிருந்து மூன்று நாட்களும் அவர் வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால், பயணத்தடையை தளர்த்துமாறு கோரியிருந்தார்.
குறித்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, தடையை தளர்த்துவதற்கு இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அத்துடன், விரிவான விசாரணை அறிக்கையை 2023 ஜனவரி 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த நவம்பர் 18 ஆம் திகதி, சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வரை நீடித்திருந்தது.