மெரிக்கா வழி நடத்துகிற கல்வி சமுதாயமே இலங்கையின் எதிர்கால அரசியல் தலைவர்களாக வர வாய்ப்புள்ளது என தொழிலதிபர் மனோகர் தெரிவித்துள்ளார். இன்று இ...
மெரிக்கா வழி நடத்துகிற கல்வி சமுதாயமே இலங்கையின் எதிர்கால அரசியல் தலைவர்களாக வர வாய்ப்புள்ளது என தொழிலதிபர் மனோகர் தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரிவிக்கும் போது
1990 களின் பின்னர் சர்வதேசம் இலங்கை இராணுவ மூத்த அதிகாரிகளை புலமைப் பரிசில் மூலம் உள்வாங்கியது. இதன் விளைவு இலங்கையில் தங்கள் தேவைகளை நிறைவேற்றினார்கள்.
புலமைப் பரிசில் வழங்கிய நாடுகளின் வரிசையில் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், லண்டன், அமெரிக்கா, ஆனால் வெற்றி கண்ட நாடு அமெரிக்காவாகும்.
2010 இற்கு பின்னர் உயர் அதிகாரிகளுக்கு கிறீன் காட் கொடுத்து புலமைப் பரிசில் முலம் மாணவர்களை உள்வாங்கி அமெரிக்கா வழி நடத்திய வழி தான் இலங்கையை நிர்மூலமாக்கிவிட்டது.
இதனை முன் கூட்டியே அறிந்து தான் இந்தியா 13 தான் தமிழருக்கு தீர்வு என ஜ.நா வில் தனது கருத்தை பதிவிட்டது. இப்போது இலங்கையின் நிழல் அரசாங்கம் அமெரிக்காவின் கையில் உள்ளது.
இந்த கால கட்டத்தில் தமிழர்கள் தீர்வைப் பெறாவிட்டால் எதிர் காலத்தில் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். தனி மனித சுதந்திரம் பேணக் கூடிய அரசியல் தலைமைகளின் முன்னே அந்த நேரத்தில் தேச வழமை கூட இல்லாமல் போகலாம். அமெரிக்கா வழி நடத்துகிற கல்வி சமுதாயமே இதற்கான காரணமாகும்
கடைசி தீர்வு ரணில், சம்பந்தர், மகிந்த கைகளில்
சீனா கடும் போக்கு இனவாத சிறிய கட்சிகள் முலம், அமெரிக்கா திறந்த பொருளாதர கட்டமைப்பின் ஊடாக வந்தது. அதை உடைக்க ஆயுத போராட்டத்தை இந்தியா ஆரம்பித்தது.
1990 வரை திம்பு பூட்டான் வரை சென்று கண்ட தீர்வு உடைக்கப்பட்டு, மேற்கு உலகம் வரை எடுத்து சென்ற அமெரிக்கா, ஜப்பான், ஓஸ்லோ வரை நடைபெற்ற திட்டமும் கைவிடப்பட்டு எமது அரசியல்வாதிகள் எல்லோரும் ஏகாதிபத்தியத்தின் கைக்குள் சிக்கு பட்டு முடிவு எடுக்க முடியாமல் தடு மாறும் நேரம் இது என்றார்.