யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொ...
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அரியாலை பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.