ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அர்த்தமுள்ள அதிகார பகிர்வையே எதிர்பார்ப்பதாகவும் தமிழ்...
ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அர்த்தமுள்ள அதிகார பகிர்வையே எதிர்பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு, அதனை விடுத்து செயற்பட்டால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறினார் என கருதப்படும் எனவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதியுச்ச அதியுச்ச அதிகார பகிர்வு என குறிப்பிட்டுக் கொண்டு ஒற்றையாட்சி முறைமைக்குள் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும்; அவர் குறிப்பிட்டுள்ளார்.