உரும்பிராய் ஞான வைரவர் அறக்கட்டளை நிறுவனத்தினால் 300 மாணவர்களுக்கு சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் கற்றல் உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கி வ...
உரும்பிராய் ஞான வைரவர் அறக்கட்டளை நிறுவனத்தினால் 300 மாணவர்களுக்கு சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் கற்றல் உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
ஞான வைரவர் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.