லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல பல்தேசிய நிறுவனங்களின் தொழிலதிபருமான அல்லிராஜா சுபாஸ்கரனை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்க...
லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல பல்தேசிய நிறுவனங்களின் தொழிலதிபருமான அல்லிராஜா சுபாஸ்கரனை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சந்தித்து கலந்துரையாடினார்.
ஐக்கிய இராச்சியத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக அங்கஜன் இராமநாதன் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றையிட்டுள்ளார்.
அந்த பதிவில், இலங்கை தமிழ் மக்களுக்காக அவர் ஆற்றும் உதவிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இதன்போது பேசிக்கொண்டோம்.
அரசியல் ரீதியாகவும், தன்னார்வ ரீதியாகவும், முதலீடுகள் ரீதியாகவும் எமது மக்களுக்காக பல்வேறு நன்மைகளை செய்ய வேண்டும் என்ற பெருவிருப்பம் அவரிடம் உள்ளது.
தற்போதும் விளம்பரங்கள் இன்றி அவர் எம்மக்களுக்கு ஆற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நன்றியையும் இச்சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தேன் – என்றுள்ளது.
அல்லிராஜா சுபாஸ்கரன் இலங்கையை சேர்ந்தவர் என்பதுடன் இலங்கையில் பல்வேறுபட்ட நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.