உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயல்படுவோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயல்படுவோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில், நிதி அமைச்சின் செயலாளருக்கும், நிதி அமைச்சர் சார்பில் சட்டமா அதிபருக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான விசாரணையின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தலுக்கான அச்சப் பணிகளுக்கு தேவையான நிதியை வழங்காதிருக்கும் நிதி அமைச்சின் செயற்பாட்டிற்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.