அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு என அமைச்சர் காஞ்சன...
அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் இதே நிலைப்பாடு காணப்படுவதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளராகக் களமிறக்கப்பட்டால் அவருக்கு ஆதரவளிக்க நாம் தயார் என்றும் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எவ்வாறாயினும் மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சி தலைவர்களுடன் பேசியே இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என ஆளும்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.