ஐபிஎல் போட்டிகளின் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்னை நோக்கி திருப்பியுள்ள இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரனவை தன்னை விட ...
ஐபிஎல் போட்டிகளின் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்னை நோக்கி திருப்பியுள்ள இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரனவை தன்னை விட சிறந்த பந்து வீச்சாளராக மாற்றுவதே தனது நோக்கம் என வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்
மதீசபத்திரன டெஸ்ட்போட்டிகளிலும் விளையாடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
கிரிக்கின்போவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
கேள்வி - மதீசபத்திரன குறித்து நீங்கள் எப்போது கேள்விப்பட்டீர்கள்
பதில்-
2020 இல் இடம்பெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கிண்ணப்போட்டியின் பின்னர் எனக்கு மதீசபத்திரன குறித்து தெரியவந்தது.
இலங்கை கிரிக்கெட்டிற்காக ஆலோசகராக பணிபுரிந்துகொண்டிருந்த மகேலஜெயவர்த்தன என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
மல்லி கண்டியிலிருந்து ஒரு பையன் இருக்கின்றான் அவன் உன்னை போல பந்துவீசுகின்றான் வேகமாக பந்துவீசுகின்றான் ஆனால் கட்டுப்பாடு இல்லாமல் இரண்டு பக்கமும் பந்துவீசுவதால் போட்டிகளில் அவனை விளையாடவைப்பது கடினம் கட்டுப்பாடு இல்லை உங்களால் ஏதாவது செய்ய முடியுமா என கேட்டார் என
ஆகவே அவர் மதீசவை என்னிடம் அனுப்பினார் நாங்கள் கெத்தாராமவில் சந்தித்தோம், அவருக்கு நிறைய அனுபவம் இருக்கவில்லை,ஆனால் அவர் அச்சமற்ற மனஉறுதி மிக்கவர் என அவரை பார்த்தவுடன் நான் அறிந்துகொண்டேன் அது மிகவும் முக்கியம்
நான் அவரிடம் எந்த வகைபோட்டியில் விளையாடுவது என்பது குறித்து தற்போது தீர்மானிக்காதே இலங்கை அணிக்கு எந்தவகை போட்டியில் நீ தேவைப்படுகின்றாயோ அதில் நீ விளையாடவேண்டும் என தெரிவித்தேன்
நீ காயமடைந்தால் எந்த வகை போட்டியில் விளையாடவேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்,ஆனால் நீ இந்த பாணியில் பந்துவீசுவதால் அது உனக்கு கடினமாகயிருக்காது என தெரிவித்தேன்.
இந்த முறை ஐபிஎல் தொடரில் அவரது பந்து வீச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்- அவர் ஐபிஎல்லில் சிறப்பாக பந்து வீசுகின்றார் ஆனால் அவர் சர்வதேச போட்டிகளிற்கு தன்னை இன்னமும் தயார்படுத்தவேண்டும்,சர்வதேச போட்டிகளில் 12 வீரர்கள் ஒரு அணியில் விளையாடுவதில்லை,ஐபிஎல்லில் மாத்திரம் அது சாத்தியம்
ஐபிஎல்லில் இறுதிஓவர்களிற்கே சிஎஸ்கே அவரை பயன்படுத்துகின்றது.
ஆனால் தேசிய அணிக்காக விளையாடினால் நீங்கள் நிச்சயமாக பவர்பிளே ஓவர்களை வீசவேண்டியிருக்கும்.அங்கு அவருக்கு ஸ்விங் தேவையாகயிருக்கும்,அவரால் தற்போது ஸ்விங் பண்ண முடியவில்லை.
சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கான புத்திசாலித்தனம் அவருக்கு வேண்டும்,ஒரு சில போட்டிகளின் பின்னர் உங்களை எப்படி விளையாடவேண்டும் என்பதை எதிரணியினர் அறிந்துகொள்வார்கள்.
அந்தகட்டத்திலிருந்து தப்பிபிழைத்து எப்படி தொடர்ந்தும் பந்துவீசுவதை என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
அவர் பத்து டெஸ்ட்போட்டிகளிலாவது விளையாடவேண்டும்,இதன் மூலமே பந்து வீசுவதற்கான உடல்தகுதியை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
நான் 30டெஸ்ட்போட்டிகளில் விளையாடினேன் ஒருநாள் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான உடல்தகுதியை நான் பெற்றுக்கொள்ள அதுவே உதவியது.
நீங்கள் ஒரு இனிங்சில் 20-25 ஓவர்கள் வீசும்போது உங்கள்திறனை தொடர்ந்து தக்கவைத்திருக்கவேண்டும்.
கேள்வி- டோனி அவரை கையாளும் விதம் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்-மதீச பத்திரனவால் ஆரம்ப ஓவர்களை வீசமுடியாது என்பதை டோனி உணர்ந்துள்ளார்,
மேலும் சர்வதேச போட்டி அனுபவம் இல்லாத இந்திய துடுப்பாட்டவீரர்களிற்கு எதிராகவே டோனி மதீசபத்திரனவை பந்து வீசச்சொல்கின்றார்.
அவரது பந்துவீசும் பாணி மற்றும் 145 கிலோமீற்றர் வேகத்தில் அவரை அவர்கள் எதிர்கொள்வது கடினம்.
அது எம்எஸின் 20 வருட அனுபவத்தின் பலன்.அடித்து ஆடும் வீரர்களிற்கு எதிராக மதீச பத்திரன பந்துவீச்சு வேகத்தை குறைக்கவேண்டும் என டோனிஅவரை கேட்டுக்கொள்கின்றார்.
ரோகித்சர்மா மகேலஜெயவர்த்தன விராட்கோலி போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களிற்கு எதிராக பந்துவீச மதீசபத்திரன சிரமப்பபடுவார்.
கேள்வி
மதீச பத்திரன டெஸ்ட்போட்டிகளில் விளையாடக்கூடாது என டோனிதெரிவித்துள்ளார்- நீங்கள்அதனை கடுமையாக எதிர்க்கின்றீர்கள்?
பதில்-
டோனி மதீசபத்திரன ஐசிசி போட்டிகளில் விளையாடவேண்டும் என டோனி தெரிவிக்கின்றார்- அவர் வேடிக்கைக்காக இதனை தெரிவிக்கின்றாரா என்பது எனக்கு தெரியவில்லை.( சிரிக்கின்றார்)
தேசிய அணிக்காக விளையாடும்போது ஐசிசி போட்டிகளில் மாத்திரம் விளையாடுவது கடினமான விடயம்.
அவர் டெஸ்ட்போட்டிகளில் விளையாடக்கூடாது என எவராவதுதெரிவிக்கின்றார்கள் என்றால் அவர் காயமடைந்துவிடுவார் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள்அவ்வாறு தெரிவிக்கி;ன்றனர்.
நான் முதலில் டெஸ்ட்போட்டிகளிலேயே விளையாடினேன் என்னை டெஸ்ட்போட்டிகளில் விளையாடவேண்டாம் என எவரும் தெரிவிக்கவில்லை.
கேள்வி- மதீச பத்திரனவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக எவ்வாறு வளர்த்தெடுக்கவேண்டும்
பதில்-நான் எப்படியாவது மதீசபத்திரனவை என்னை விடசிறந்த பந்துவீச்சாளராக மாற்ற விரும்புகின்றேன்,
அடுத்ததொடரில் நான் எப்படியாவது இலங்கை அணியுடன் இணைந்து அவர் சில ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்ய முயல்வேன்.